அலுவலகத்திற்கு தன்னைத் தானே டெலிவரி செய்துகொண்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம்.!
youth delivery her self to office in banglore
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அதனால், அவர்கள் வேலைக்கு நேரத்தில் செல்ல வேண்டும் என்று ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஓலா, உபர் போன்றவை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். இந்த அனுபவத்தை அந்த இளைஞர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பதிவில், "ஓலா, உபர் எதுவும் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
youth delivery her self to office in banglore