கால்சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறல்... இளைஞருக்கு நேர்ந்த கதி..! கேரளாவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கால்சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் வெடித்ததில் இளைஞர் காயமடைந்தார்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பையனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் ரஹ்மான்(23). இவர் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் ரஹ்மான் நேற்று வழக்கம்போல் கோழிக்கோட்டில் உள்ள அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது, அவரது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இதில் அவரது கால்சட்டை தீப்பிடித்தது. இதனால் ஹரிஷ் ரஹ்மான் காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த ஹரிஷ் ரஹ்மான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, மொபைல் போன் வெடித்து சிதறியதில் உயிரிழந்தது குறிப்பிட்டதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth injuries after mobile phone explodes in his trouser pocket in Kozhikode Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->