மது அருந்தச் சென்ற வாலிபர் சடலமாக மீட்பு.!
youth murder in odisa
ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்பூர் மாவட்டம் தெல்னாடி கிராமத்தில் இன்று காலை வாலிபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சடலமாக கிடந்தவர் டவுமல் கிராமத்தைச் சேர்ந்த ராம்சிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியதில், ராம்சிங் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தன் மனைவியுடன் தெல்னாடி கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றிருந்தார்.
அங்கு அவர் நரேஷ் என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். ஆனால், மறுநாள் வரை ராம்சிங் வீடு திரும்பவில்லை என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பருடன் மது அருந்தச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தெல்னாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.