பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை போக்கும் அற்புதமான கோந்து லட்டு.! இதோ சூப்பர் ரெஸிபி.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று  இடுப்பு வலி. இந்த இடுப்பு வலியானது பெரும்பாலும் சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடியதாகும். இந்த இடுப்பு வலியை போக்குவதற்கு அனைத்து சத்துக்களையும் கொண்ட இந்த லட்டுவை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்

 தேவையான பொருட்கள்:

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,
கோந்து  - 50  கிராம் 
பாதாம்  - 1/2  கப் 
பிஸ்தா -  1/2  கப் 
முந்திரிப் பருப்பு - 1/2  கப் 
உலர் பேரீத்தம் பழம்  - 1/2  கப் 
உலர் திராட்சை  - 1/4  கப் 
ஏலக்காய் பொடி  - 1/4   டீஸ்பூன்
கோதுமை மாவு  - 2  கப் 
சர்க்கரை  - 1  கப் 
கசகசா  - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை :

ஒரு கப் சீனியை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாய் வைத்து அதில் கசகசாவை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கோந்தை  போட்டு நன்றாக வறுக்கவும்.

ஜவ்வரிசி போல நன்றாக வருந்ததும் அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் பருப்பு வகைகள் மற்றும் பேரித்தம் பழம் ஆகியவற்றை போற்றி நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

முழுவதுமாக பொடியாகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்  இவற்றை இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். 

இந்த பருப்பு வகைகளையும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். இப்போது  ஒரு கப் கோதுமை மாவை எடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் கோதுமை மாவை போட்டு  நன்றாக வறுக்கவும்.

ஒரு நிமிடம் வருந்ததும் கோந்து வறுத்து வைத்த பருப்பு வகைகள், கசகசா, ஏலக்காய் பொடி மற்றும் சீனி ஆகியவற்றையும் சேர்த்து  நன்றாக வதக்கவும். 

இவை நன்றாக வறுந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும். நன்றாக ஆறிய பின் இவற்றை எடுத்து நம் கைகளில் உருண்டையாகப் பிடித்தால் சுவையான லட்டு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazing laddu recipe for back pain relief for women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->