ஆரோக்கியமான 'வாழைப்பூ சாம்பார்' இப்படி ட்ரை பண்ணுங்க!
Banana flower dal sambar recipe in tamil
ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
சர்க்கரை
உப்பு
எண்ணெய்
பெருங்காயத்தூள்
மிளகாய்
துவரம் பருப்பு
மஞ்சள் தூள்
சின்ன வெங்காயம்
புளி கரைசல்
தக்காளி
செய்முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் வாழைப்பூ அதனுடன் தக்காளி சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை மற்றொரு குக்கரில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை துவரம் பருப்பு உடன் சேர்த்து அதனுடன் புளி கரைசல், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும் அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் தயார்.
English Summary
Banana flower dal sambar recipe in tamil