ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் கோல்ட் காபி.! செய்வது எப்படி.?
Chocolate cold coffee
சுவையான அனைவருக்கும் பிடித்த ஹோட்டல் ஸ்டைலில் சாக்லேட் கோல்ட் காப்பி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பால் - 100 மில்லி
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1 டீஸ்பூன்
வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
சாக்லேட் சிரப் - 3 டீஸ்பூன்
கொக்கோ பவுடர்- 2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை நன்கு காய்ச்சி குளிர வைக்க வேண்டும். பிறகு இன்ஸ்டன்ட் காபி பொடியில், சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு குளிர்ந்த பாலில், காபி, வெனிலா ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப், கொக்கோ பவுடர், சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு காபி கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி, சிறிது இன்ஸ்டன்ட் காபி தூள் தூவி பரிமாறலாம்.