ஆரோக்கியமான வாழை இலை ரசம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமான சுவை நிறைந்த அனைவருக்கும் பிடித்தமான வாழை இலை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 3 

சிறிய இளம் வாழை இலை - 1

மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

புளி - சிறிதளவு

பூண்டு - 6 பல் 

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு

கொத்தமல்லி

கறிவேப்பிலை 

தாளிக்க:

எண்ணெய்-1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் -1/4 டீஸ்பூன்

பெருங்காயம் தூள் சிறிதளவு

செய்முறை:

•முதலில் வாழை இலையை நன்றாக கழுவி, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு தக்காளி, கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். பிறகு புளியை நன்றாக தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

•இதையடுத்து வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தூள், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

•பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இதையடுத்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆரோக்கியமான, சுவையான வாழை இலை ரசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy and tasty Banana leaf rasam recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->