முடக்கத்தான் கீரையில் பொரியலா? வாங்க பார்ப்போம்.! - Seithipunal
Seithipunal


மூட்டு வலி , வாதம், பித்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருந்தாக முடக்கத்தான் கீரை உள்ளது. இந்தக் கீரையை வைத்து தோசை செய்து சாப்பிடலாம். அனால், முதல் முறையாக பொரியல். எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:-

முடக்கத்தான் கீரை, வெங்காயம், வர மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, கடலை எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய தூள், தேங்காய்.

செய்முறை :-

முடக்கத்தான் கீரையை நன்றாக கழுவி சிரத்தையாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடலை பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அதில், தோல் நீக்கி தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். 

பூண்டு வதங்கிய உடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதில் பெருங்காய தூள், மஞ்சள் தூள், நறுக்கிய முடக்கத்தான் கீரை, உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். 

கீரை நன்றாக வெந்து தண்ணீர் சுருண்டு வரும் போது ஒரு கப் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இரக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முடக்கத்தான் கீரை பொரியல் தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hoe to make mutakaththan keerai poriyal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->