வீட்டில் அவல் இருக்கா? அப்போ இதை செய்து சாப்பிடுங்க.!
how to make avul dosa
வீட்டில் அவல் இருக்கா? அப்போ இதை செய்து சாப்பிடுங்க.!
தோசையில் பல விதம் உண்டு. அரிசி மாவு தோசை, முடக்கத்தான் தோசை, மணத்தக்காளி தோசை, கம்பு தோசை, வெங்காய தோசை, கேழ்வரகு தோசை என்று அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவலைக் கொண்டு தோசை செய்வது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருள்:-
பச்சரிசி
புழுங்கல் அரிசி
அவல்
உளுந்து
வெந்தயம்
சர்க்கரை
உப்பு
செய்முறை:-
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் உள்ளிட்டவற்றை ஊறவைக்க வேண்டும். இவையனைத்தும் நன்கு ஊறிய பின்னர் கிரைண்டரில் அரைத்து உப்பு போட்டு கரைந்து புளிக்க வைக்க வேண்டும்.
மாவு புளித்தவுடன் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை சூடு படுத்த வேண்டும். தோசைக்கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றி மூடி வைத்து வேகா வைக்க வேண்டும். தோசை வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்து சட்னித் தொட்டு சாப்பிட வேண்டும்.