சப்பாத்திக்கு ஒரே குருமா செய்து போர் அடிக்குதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!
how to make chapati chutny
சப்பாத்திக்கு ஒரே குருமா செய்து போர் அடிக்குதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!
நாம் அனைவரும் சப்பாத்திக்கு தக்காளி தொக்கு, குருமா என்றுதான் செய்து சாப்பிட்டுள்ளோம். ஆனால், இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கிறது. அவர்களுக்காக புது விதமான ஒரு சட்னியை செய்வது குறித்து இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள்கள்:
உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, கடலை மாவு, எண்ணெய், உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலை மாவை எடுத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கிய பின்னர் தண்ணீர் கலந்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை மூடாமல் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் வராமல் கலக்க வேண்டும்.
நன்கு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். விரும்பினால் வேகவைத்த உருளைக்கிழங்குகளையும் சேர்த்தால் கூடுதல் சுவை நன்றாக இருக்கும்.
English Summary
how to make chapati chutny