முட்டையில் இப்படி ஒரு ரெசிபியா? வாங்க பார்க்கலாம்.!
how to make egg sukka
நாம் இதுவரைக்கும் முட்டையில் ஆம்லெட், பொரியல், குழம்பு, வறுவல் என்றுதான் செய்து சாப்பிட்டிருப்போம். அதனால், புதிய சுவையில், முட்டை சுக்கா எப்படி செய்வது? என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை
சோம்பு
மஞ்சள் தூள்
துருவிய தேங்காய்
சின்ன வெங்காயம்
தக்காளி
கிராம்பு
பட்டை
தனியா விதைகள்
மிளகு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
செய்முறை:-
முட்டையை வேக வைத்து, மஞ்சள் கருவு உடையாமல் வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதன்பிறகு ஒருமிக்சி ஜாரில் பட்டை, சோம்பு, தனியா விதைகள், மிளகு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதையடுத்து, எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை சுக்கா தயார்.