சுவையான அத்திப்பழம் கீர் செய்வது எப்படி - வாங்க பார்க்கலாம்.!
how to make fig keer
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி உண்டாக உலர்ந்த அத்திப்பழத்தைக் கொண்டு கீர் செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். இது எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
அத்திப்பழம்
பாதாம்
முந்திரி
குங்குமப்பூ
ஏலக்காய் தூள்
நெய்
பால்
பால் பவுடர்
கன்டென்ஸ்டு மில்க்
நாட்டு சர்க்கரை
செய்முறை:-
முதலில் அத்தி பழம், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அத்திப்பழம், முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும். பின்னர் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து சிறு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடரை கட்டியில்லாமல் சேர்த்து கைவிடாமல் கலந்து, பால் நன்கு சுண்டியதும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு, இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான அத்திப்பழம் கீர் தயார்.