முடக்கத்தான் கீரையில் சூப் செய்வது எப்படி?
how to make mudakkaththan keerai soup
உடல்வலி, மூட்டுகளில் வீக்கம், உடல் கனத்து வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முடக்கத்தான் கீரையை சாப்பிட வேண்டும். இதில், தோசை, சட்னி, ரசம் உள்ளிட்டவற்றை தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், சூப் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முடக்கறுத்தான் இலை
பூண்டு
துவரம் பருப்பு
மிளகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
புளி
தக்காளி
நெய்
கடுகு
செய்முறை:
ஒரு வாணலில் முடக்கத்தான் கீரை, பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் இட்டு லேசாக வதக்கி ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளி தண்ணீரை தக்காளி கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இது நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொதிக்க விடவும்.
இதை சூப்பாகவும், சூடான சாதத்துடன் கலந்து ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். மூல நோய் வள்ளவர்களுக்கு தொடைப்பகுதியில் வலி ஏற்படும். அப்பொழுது இந்த ரசம் சாப்பிட வலி குறையும்.
English Summary
how to make mudakkaththan keerai soup