சர்க்கரை நோயைத் தீர்க்கும் நெல்லிக்காய் பொடி.!
how to make nellikai powder
நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஊட்டசத்து அளிக்கும் வகையில் நெல்லிக்காய் பொடி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
நெல்லிக்காய், எண்ணெய், மல்லி விதை, வரமிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம், சுக்கு, எள்ளு
செய்முறை:-
முதலில் நெல்லிக்காயை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் துருவி வைத்த நெல்லிக்காயை ஈரம் போகும் அளவிற்கு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லிவிதை, வரமிளகாய், பெருங்காயம், சுக்கு, கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக சிவக்கும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும். இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான நெல்லிக்காய் பொடி தயார்.
இந்த நெல்லிக்காய் பொடியை சாதம் அல்லது இட்லி, தோசைக்கு பொடியாக கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
English Summary
how to make nellikai powder