பத்து நிமிடத்தில் பக்காவான நூடுல்ஸ் - வாங்க பார்க்கலாம்.!
how to make noodles
தற்போதைய காலகட்டத்தில் நூடுல்ஸ் சமைப்பது என்பது பலருக்கும் எளிதான ஒன்றாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நூடூல்ஸை வீட்டிலேயே எவ்வாறு சமைக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு, மைதா மாவு, தண்ணீர், உப்பு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து புரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து அதனை முறுக்கு பிழியும் உலக்கையில் போட்டு நூடுல்ஸ் வடிவ உருளையான அச்சில் பிழிந்து கம்பியில் தொங்க விடவேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து நூடுல்ஸ் தொங்கவிடப்பட்ட கம்பியை பாத்திரத்தின் மேல் வைத்து ஆவி படும்படி வேக வைக்க வேண்டும். இந்த நூடுல்ஸை, மசாலாக்கள் சேர்த்து செய்து குழந்தைகளுக்கு தரலாம்.