உடலுக்கு பலம் தரும் பருத்தி பால்..! வீட்டிலேயே செய்யலாம்.!
How to make Paruthi Milk
பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
தேவைப்படும் பொருட்கள்:
தேங்காய் துருவல் - விருப்பத்திற்கு ஏற்ப
கருப்பு பருத்தி விதை - 50 கிராம்
கருப்பட்டி - 1 வட்டு (பெரியது)
பச்சரிசி - 100 கிராம்
தேங்காய் மூடி - 1
முந்திரி - சிறிதளவு
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - 3
செய்யும் முறை:
பருத்தி விதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து பால் எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர், பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.
கருப்பட்டியை நன்கு பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிடவும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.