டேஸ்டியான ஹோட்டல் ஸ்டைல் பிஷ் ஃபிங்கர்ஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான பிஷ் ஃபிங்கர்ஸ் வீட்டிலேயே ஓட்டல் ஸ்டைலில் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் (அ) வவ்வால் மீன் -1/2 கிலோ 

எலுமிச்சை பழம் - 2 டீஸ்பூன்

ரொட்டித்தூள் - 100 கிராம்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா -1/4 தேக்கரணடி

முட்டை - மூன்று (வெள்ளை)

மிளகுத்தூள் - 1டீஸ்பூன் 

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

உப்பு 

எண்ணெய் 

செய்முறை:

முதலில் முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்பு மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

பிறகு மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும். பின்பு மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், எலுமிச்சைபழ சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

பிறகு மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவுதாங்க டேஸ்டியான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி....!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Tasty fish fingers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->