பிரியாணிக்கு அருமையான கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் கசப்பில்லாதது - கால் கிலோ (நீள வாக்கில் ஆறு துண்டுகளாக கொத்தாக போடவும். கத்தரிக்காய் பிரியக் கூடாது,

பெரிய வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது),

தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது),

பூண்டு - ஆறு பல் மிகப் (பொடியாக நறுக்கியது),

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்,

மிளகு - அரை டீஸ்பூன் (பாதியாக உரலில் இடிக்கவும்),

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

வேர்க்கடலை - (வறுத்தது) இரண்டு டீஸ்பூன்,

வெள்ளை எள் - இரண்டு டீஸ்பூன்,

கடுகு - தாளிக்க சிறிது

புளி - ஒரு எலுமிச்சை அளவு கரைத்து வைக்கவும்,

மஞ்சள் தூள் - சிறிது,

மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்,

தனியா தூள் - ஒன்னரை ஸ்பூன்,

உப்பு - தேவைக் கேற்ப,

நல்லெண்ணெய் - நூற்றி ஐம்பது மில்லி,

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிது,

முந்திரி - ஆறு.

கத்தரிக்காய் மசாலா:

ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றாமல் முதலில் வெள்ளை எள் போட்டு நன்கு வெடித்து சிவக்கும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும். பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றி வைத்து விட்டு வேர்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்,

பின்னர் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் போட்டு வதக்கவும். பின்னர் முந்திரி போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் கருக்காமல் வறுத்து எடுத்து ஆற வைத்து பவுடர் ஆக ஆக்கவும்.

ஒரு அடி கனமான இரும்பு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய் விட்டு கத்தரிக்காயை மிதமான் சூட்டில் கலர் மாறும் வரை வறுக்கவும். இப்போது நிறம் மாறி ஒரு பழுப்பு நிறம் வந்தவுடன் அதை எடுத்து வைத்து விடவும்.

அதே பானில் மீதமுள்ள எண்ணைய் சேர்த்து கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் இதில் வதக்கிய கத்தரி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து சிரித் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் கத்தரிக்காய் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு புளிக்கரைசலை விட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் இதில் அரைத்து வைத்த பொடியை போட்டு நன்கு கலைக்கி மிதமான தீயில் மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் வைக்கவும்.

இப்போது உப்பு காரம் சரி பார்த்து அட்ஜஸ்ட் செய்யவும். இதில் ஆயில் பிரிந்து வரும் வரை வைத்து பின்பு இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும். இதை அதிக அளவில் செய்யும்போது இந்த அளவுகளை அப்படியே அதிகப்படுத்திக் கொள்ளவும். இந்த அளவு நான்கு பேர் சாப்பிட போதுமானதாக இருக்கும்.

குறிப்பு: இது பிரியாணி, பிரிஞ்சி, இட்லி, தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kathirikkai gravy for briyani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->