கத்தரிக்காயில் சட்னி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.. நாவூற வைக்கும் சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


வழக்கமாக கார சட்னி, தக்காளி சட்னி என செய்து கொடுப்போம். ஆனால், சற்று வித்யாசமாக கத்தரிக்கையால் சட்னி செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையானவை :

அரைக்க :

கடலை பருப்பு - 1 tsp

உளுத்தம் பருப்பு - 1 tsp

எண்ணெய் - 1tsp

வெந்தயம் - 1/4 tsp

சீரகம் - 1/2 tsp

மிளகு - 10

காய்ந்த மிளகாய் - 4

பச்சை மிளகாய் - 2

வதக்க :

கத்தரிக்காய் - 1/4 கிலோ

தக்காளி - 1

கொத்தமல்லி - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1/2 tsp

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தே.அ

எண்ணெய் - 2 tsp

தாளிக்க :

நல்லெண்ணெய் - 2 tsp

சீரகம் - 1/2 tsp

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு போட்டு வதக்கவும். அதே போல உளுத்தம் பருப்பை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.சீரகம் , வெந்தயம் , காய்ந்த மிளகாய் என மற்ற அனைத்து பொருட்களையும் வதக்கி தட்டில் கொட்டுங்கள். இவை ஆறியதும் அரைத்து கொள்ளுங்கள்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் சுருங்கும் வரை வதக்கி கொள்ளுங்கள், அதனுடன் தக்காளியை வதக்கி கொள்ளுங்கள்.  கத்தரிக்காய் கலவையை  அரைத்த விழுதுடன் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள். அதன்பின்னர், அதனை பச்சைவாசனை போகும் வரை வதக்கி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Katjarikay chutney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->