சர்க்கரை நோயாளிகளுக்கு காலையில் இந்த கஞ்சி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


மாப்பிளை சம்பா அரிசியில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இது சர்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இந்த அரிசியில் தினம் கஞ்சி வைத்து சாப்பிட்டு வரலாம்.

தேவையான பொருட்கள்:

மாப்பிள்ளை சம்பா அரிசி - ஒரு கப்,

முட்டைகோஸ் - கால் கிலோ,
முள்ளங்கி, தக்காளி- ஒன்று,
பெரிய வெங்காயம்- ஒன்று,
பச்சை மிளகாய்- ஒன்று,
எலுமிச்சம்பழம் - ஒன்று,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
கொத்தமல்லி - அரை கட்டு,
புதினா - கால் கட்டு,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பூண்டு பல் - சிறிதளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி.ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன்  தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து நன்றாக கோதிக்கவிட்டு அதில் வெந்த அரிசியை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mappilai Samba Kanji


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->