ஆரோக்கியமான ''தினை பால் பொங்கல்'' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!
Millet Milk Pongal recipe in tamil
ஆரோக்கியம் நிறைந்த தினை பால் பொங்கல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தினை
பாசிப்பருப்பு
பால்
வெல்லம்
நெய்
முந்திரி திராட்சை
ஏலக்காய் தூள்
பச்சை கற்பூரம்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். தினை மற்றும் வறுத்த பாசிப்பருப்பை ஒன்றாக சேர்ந்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரையும் வரை நன்கு கலந்து விடவும். பொங்கல் பானையை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் தேவையான அளவு பால் மற்றும் ஊற வைத்துள்ள தினை மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக வேக வேகவும்.
தினை நன்றாக குழைந்து வெந்து வந்ததும் வெல்ல கரைசல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பொங்கல் கெட்டியானதும் சிறிதளவு பச்சை கற்பூரம் நெயில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான தினை பால் பொங்கல் தயார்.
English Summary
Millet Milk Pongal recipe in tamil