சாலையில் தலை கீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து..20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!
Omni bus overturns on road More than 20 passengers injured
புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சென்ற ஆம்னி பேருந்து செஞ்சி அருகே தலை கீழாக கவிழிந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தனியார் ஆமினி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த தனியார் ஆமினி பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.அப்போது பேருந்து அல்லது திண்டிவனம் வழியாக செஞ்சி சென்று கொண்டிருந்தது. அப்போது செஞ்சி சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் பக்கத்தில் தலை கீழாக கவிழிந்து விபத்துக்குள்ளானது.
அப்போது பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக தகவல் குறித்து இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பயணிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் .அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கர்நாடக சென்ற பேருந்து தலை கீழாக கவிழிந்த கவிழ்ந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பரபரப்பு காணப்பட்டது.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
English Summary
Omni bus overturns on road More than 20 passengers injured