ரமலான்நோன்பு துறக்கும் நேரம்..இன்றும் நடைமுறையில் உள்ள பீரங்கி முழக்கம்! - Seithipunal
Seithipunal


ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்கபள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பாங்கொலிக்கும் நடைமுறை வருவதற்கு பல்லாண்டுகள் முன்பு வழக்கத்தில் இருந்த பீரங்கி முழக்கம் தற்போது பாரம்பரியம் பாதுகாக்க தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்க அரபுலகின் பல பகுதிகளிலும் பீரங்கி முழங்கும் முறை தற்போதும் வழக்கத்தில் உள்ளது.Cannon Fire என்றழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி அந்தந்த நாட்டின் காவல்துறை சார்பில் இயக்கப்படுகிறது.

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பாங்கொலிக்கும் நடைமுறை வருவதற்கு பல்லாண்டுகள் முன்பு வழக்கத்தில் இருந்த பீரங்கி முழக்கம் தற்போது பாரம்பரியம் பாதுகாக்க தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.

அமீரகத்தில் 1960ல் துவங்கப்பட்ட இஃப்தார் நேரம் பீரங்கி முழக்கம் தற்போது ஏழு இடங்களில் சிறப்பு ஏற்பாடாக நடைமுறையில் உள்ளது.யுஏஇ ல் புர்ஜ் கலீபா, ஜுமைரா கோட்டை, அல் மன்கூல், அல் பராஹா ஈத்கா மைதானம் உட்பட ஏழு முக்கிய பகுதிகளில் அமீரக காவல்துறை அதிகாரிகள் பீரங்கி முழங்குவதை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவதும் அங்கேயே நோன்பு துறக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகள் முன்பு எகிப்தில் இந்த வழக்கம் துவங்கியதாகவும், பின்னர் குவைத், கத்தார், அமீரகம் உட்பட பல்வேறு அரபு நாடுகளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வழக்கம் பாரம்பரியம் பேணி பாதுகாக்க இன்றும் நடைமுறையில் உள்ளது..

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramadan is the time to break the fast The cannon roar that is still in vogue today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->