முருங்கை கீரையில் ரசம் வைத்திருக்கிறீர்களா? சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


தினமும் முருங்கை கீரை சாப்பிட்டு வர உங்கள் உடலுக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் கிடைக்கும். முருங்கை கீரையில் அதிக அளவு உள்ளது எனவே முருங்கை கீரை தினமும் உணவில் சேர்த்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்தனை நன்மைகள் கொண்ட முருங்கை கீரையை பொறியல் அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், முருங்கை கீரையில் ரசம் வைத்திருப்போமா அதை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

புளித் தண்ணீர் - 1 கப்

முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி

பூண்டு - 5 பற்கள்

உப்பு - தே. அளவு

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 Tsp

பூண்டு - 4 பற்கள்

மிளகுப - 1 Tsp

தாளிக்க :

எண்ணெய் - 1 Tsp

கடுகு - 1/2 Tsp

சீரகம் - 1 Tsp

கருவேப்பிலை

செய்முறை:

கடாயில் கீரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிரட்டி வேக விடவும். வெந்ததும்ம் அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் புளித் தண்ணீரைக் கரைத்து வாசனை போகுமாறு நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அதில் கீரையை சேர்க்கவும்.

பின்னர் பெருங்காயப் பொடி , சீரகம், மிளகு,பூண்டு ,  ஒரு தக்காளி  அனைத்தையும் அரைத்து அதை கீரையுடன் சேர்த்து கொள்ளுங்கள். மற்றோரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து அதில் சேர்த்தால் ரசம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murungaikeerai Rasam Recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->