கேசரி பிரியரா நீங்கள்.. சற்றே வித்தியாசமான நாட்டு சக்கரை கேசரி..!
Nattu sarkkarai Kesari
கேசரி என்றால் இங்கு பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒன்று ஆகும். ஆனால், வெள்ளை சர்க்கரை சேர்ப்பதால் உடல்நலம் கருதி சிலர் அதனை தவிர்ப்பர். அதற்காக நாட்டு சர்க்கரையை சேர்த்து சுவையான கேசரி எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை :
ரவை - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1/2 கப்
நெய் - 10 tsp
முந்திரி , திராட்சை , பாதாம் - 1/4 கப்
செய்முறை :
நாட்டு சக்கரையை கரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.அதன்பின், நாட்டு சர்க்கரையை கடாயில் கொட்டி பின் அதே கப்பில் 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்ததும் அதனை வடிக்கட்டி கொள்ளவும். நெய்யில் தேங்காயில் வறுத்து கொள்ளவும். அதே கடாயில் நெய் விட்டு ரவாவை வறுத்து கொள்ளவும்.
அது நன்கு வெந்ததும் காய்ச்சிய வெல்ல நீரை ஊற்றி கலந்துவிட வேண்டும். பாதி வெந்ததும் தேங்காயை தூவி கேசரி பதம் வரும் வரை கிளற வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும்.