ஓணம் ஸ்பெஷல் : நெய்வேத்தியத்திற்கு சுவையான நெய் அப்பம்..!
Ney Appam for Onam
நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஓணத்திற்கு ஸ்பெஷலாக சில உணவுகளை செய்வர் அதில் நெய் அப்பம் முக்கிய இடம் பெறுகிறது. அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை :
பச்சரிசி - 1 ஆழாக்கு
பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
அரியை ஊறவைத்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பில், பணியாரக்கல்லை வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் மாவை வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திரும்பி போட்டு வேகவிடவும் அப்பம் வெந்ததும் திரும்ப வேகவைத்து நைவேத்தியத்திற்கு பரிமாறலாம்.