பலா பழத்தில் பாயாசமா? இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்..!
Pala Payasam
பொதுவாக இனிப்பு பிரியர்களுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்காக பலாபழத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
பலாப்பழம் - 20
தேங்காய் பால் - 2 கப்
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 6 (பொடி)
முந்திரி - தேவையான அளவு
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பலாபழத்தில் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும். பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிக்க விடுங்கள்
அதன் பின்னர், நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கலாம்.