சப்பாத்திக்கு தக்காளி சட்னி சாப்பிட்டு அலுத்து போய்விட்டதா? இதோ உங்களுக்கான புதிய ரெசிபி.!
panneer butter masala for poori and chapati
சப்பாத்திக்கு தக்காளி சட்னி சாப்பிட்டு அலுத்து போய்விட்டதா? இதோ உங்களுக்கான புதிய ரெசிபி.!
தற்போது உள்ள சூழலில் அனைவருக்கும் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கோதுமையில் செய்யப்படும் பூரி, சப்பாத்தியை உணவாக உட்கொள்கின்றனர். இதற்கு குருமா, தக்காளி சட்னி என்று செய்து சாப்பிடுவர்.
ஆனால், வட இந்தியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது பட்டர் சிக்கன் மசாலா என்று செய்து சாப்பிடுவார்கள்.அந்தவகையில் இந்த பன்னீர் பட்டர் மசாலா செய்வது குறித்து இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் :-
பன்னீர் - 200 கிராம், வெண்ணெய் - 200 கிராம், கடலை எண்ணெய் - 50 கிராம், வெங்காய விழுது - 200 கிராம், தக்காளி விழுது - 200 கிராம், பிரியாணி இலை - 2, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, அன்னாசி பூ - 2, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், முந்திரி பேஸ்ட், தயிர் - 1/2 கப், ஃபிரஷ் கிரீம் – 1/2 கப், தேங்காய் பால் - 1/2, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கஸ்தூரி மேத்தி - 1/4 டீஸ்பூன்.
செய்முறை :-
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வைக்க வேண்டும். இந்தக் கடாயில் சம அளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதன் பின்னர் கடாயில் கிராம்பு, பிரியாணி இலை மற்றும் அன்னாசி பூ உள்ளிட்டவைச் சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியபிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து அதில் தயிர் மற்றும் மிளகாய் தூள் மற்றும் முந்திரி பருப்பு பேஸ்ட் உள்ளிட்டவற்றைச் சேர்த்து ஒன்று சேர நன்கு கிளறவேண்டும்..
இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விடாமல் கரண்டியால் கிளறவும். இந்தக் கலவையில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து அதன் மேல் ஃபிரஷ் கிரீமை ஊற்றி நன்கு கலந்து விடவேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவேண்டும். அவ்வளவுதான் இதோ உங்களுக்கான சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.
English Summary
panneer butter masala for poori and chapati