உடலை புத்துணர்வாக்கும் புதினா, சூப்பரான இட்லி பொடி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


புதினாவை வைத்து இதுவரை நாம் இட்லி பொடி செய்திருக்க மாட்டோம். இனி புதினாவிலும் சுவையான இட்லி பொடி செய்யலாம். எப்படி பொடி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

தனியா - 2 tbsp

கடலை பருப்பு - 2 tbsp

உளுத்தம் பருப்பு - 2 tbsp

எண்ணெய் - 1 tsp

மிளகு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

வெந்தயம் - 1/4 tsp

காய்ந்த மிளகாய் - 10

புதினா - கைப்பிடி அளவு

பூண்டு - 5 பல்

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் தனியாவை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு  வறுத்து கொள்ளுங்கள். அதன்பின், காய்ந்த மிளகாயை வறுத்து கொள்ளுங்கள்.மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன்  புதினாவை வதக்கி கொள்ளுங்கள். பூண்டை வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பருப்பு , காய்ந்த மிளகாய் மற்றும் மசாலா வகைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இறுதியாக புதினா பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthina Podi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->