சாதத்திற்கு என்ன குழம்பு செய்ய வேண்டும் என குழப்பமா? சூப்பரான ராஜ்மா கிரேவி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


மதியம் சாதத்திற்கு என்ன கிரேவி செய்து கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான இல்லதரசிகளின் குழப்பமாக உள்ளது. மதிய சாததிற்கு சுவையான ராஜ்மா கிரேவி செய்து கொடுத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதனை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை :

வேக வைக்க

ராஜ்மா - 1 கப்

பிரிஞ்சு இலை - 1

பட்டை - 1

உப்பு -1 tsp

சமைக்க :

நெய் - 1 1/2 tbsp

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

சீரகம் - 1/2 tsp

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 2

மஞ்சள் - 1/4

மிளகாய் தூள் - 1 tsp

தனியா தூள் - 1 tsp

சீரகத்தூள் - 1 /2 tsp

மேங்கோ பொடி - 1/2 tsp

கரம் மசாலா - 1/2 tsp

உப்பு - 1/2 tsp

கசூரி மேத்தி - 1 tsp

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

ராஜ்மாவை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளவும்.மறுநாள் குக்கரில் போட்டு பட்டை, இலை, உப்பு சேர்த்து 6 விசில் வர வேக வையுங்கள். வெந்ததும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து நெய் விட்டு பட்டை , கிராம்பு , சீரகம் சேர்த்து பொறித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளுங்கள்.

அவை நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதன்பின், கொடுக்கப்பட்ட அனைத்து பொடிகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.சிறிது நேரம் வதக்கியதும் வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் அப்படியே ஊற்றுங்கள்.  தேவையான அளவு சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடுகள். இறக்குவதற்கு முன்பு, கசூரி மேத்தியை கையில் கசக்கிப் போட்டு பின் கொத்தமல்லி தழை தூவி  இறக்கி விடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajma Gravy For Lunch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->