சப்பாத்தியில் இப்படி ஒரு புது ஸ்டைலா? - அது என்ன?
recipe of fulkha chapati
சப்பாத்தியில் இப்படி ஒரு புது ஸ்டைலா? - அது என்ன?
தற்போது மக்களிடம் சர்க்கரை நோய் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், மக்கள் தங்களது பழக்க வழக்கங்கள் உணவு முறை என்று அனைத்தையும் மாற்றிக்கொள்கின்றனர். அதனால் அவர்கள் காலை இரவு என்று சப்பாத்தி சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த சப்பாத்தியை தினமும் சாப்பிடுவதால் சிலருக்கு புடிக்காமல் போகிறது. அப்படி உள்ளவர்களுக்கு புது விதமாக ஃபுல்கா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
கோதுமை மாவு, தண்ணீர், உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், தேவையான அளவு உப்பு உள்ளிட்டவைச் சேர்த்து நன்கு பிசைந்து ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் தவாவை வைத்து சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில் இரண்டு பக்கமும் சுட்டுமாறு காட்டி எடுத்தால் சுவையான ஃபுல்கா சப்பாத்தி தயார்.
சப்பாத்தியை அதிக நேரம் தீயில் அதிக நேரம் வைத்தால், கருகிவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த ஃபுல்கா சப்பாத்தியை எண்ணெய் தடவாமல் அப்படியே மடித்து வைத்தால் மறுநாள் வரைகூட மென்மையாக இருக்கும்.