ரோட்டு கடை ஸ்டைலில் காளான் செய்து கொடுத்து, வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


ரோட்டுகடைகளில் உள்ள உணவுகளை விரும்பாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. அதுவும் ரோட்டு கடை காளானுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

முட்டைக்கோஸ் - 2 கப்

காளான் - 2 கப்

மைதா - 1 கப்
சோள மாவு - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 table spoon

கரம் மசாலா - table spoon

உப்பு - தே. அளவு

எண்ணெய்- வறுக்க

வதக்க :

வெங்காயம் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

தக்காளி - 2

மஞ்சள் - 1 tsp

மிளகாய் தூள் - 2 tsp

கரம் மசாலா - 1 tsp

தனியா தூள் - 1 tsp

உப்பு - சிறிதளவு

சோளமாவு - 1 tsp

செய்முறை :

காளான் மற்றும் கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் என மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து  ஊறவிடுங்கள் 5 நிமிடம் கழித்து அதனை பொறித்து தனியே எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

 கடாயில் வதக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வதக்கி கொள்ளுங்கள்.தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஊற்றவும். நன்றாக கலந்ததும் வறுத்து வைத்துள்ள பகோடாவை மிக்ஸிங்கில் சேர்த்து போட்டு வதக்கவும். சூப்பரான ரோட்டு கடை காளான் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rottu Kadai Style Kalan Recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->