சுவையான ஆரோக்கியமுள்ள சுண்டைக்காய் கூட்டு.! செய்வது எப்படி.?
Tasty Sundakkai kootu
சுவையான ஆரோக்கியமுள்ள சுண்டைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப்
கடுகு
பெருங்காயத்தூள்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு, நசுக்கிய சுண்டைக்காயை சேர்த்து, லேசாக வதக்கவும். பின்பு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.
பிறகு கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
பின்பு இதனை வேக வைத்த சுண்டைக்காயுடன் கலந்து, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு கடுகு, பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் சுவையான சுண்டைக்காய் கூட்டு ரெடி.