சத்தான சுவை மிகுந்த வெண்டைக்காய் பக்கோடா.! செய்வது எப்படி.?
Tasty Vendakkai pakkoda
சத்தான சுவை மிகுந்த வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
முந்திரி - 50 கிராம்
கடலை மாவு - 6 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கடலை மாவு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, சோள மாவு, பெருங்காயத்தூள், முந்திரி, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பிசையவும்.
பிறகு இதனுடன் வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு இந்தக் கலவையை, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பக்கோடாக்களாக உதிர்த்துவிட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சுவையான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.