நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை.. இப்படி செஞ்சி கொடுங்க..!
Vallarai kanji
படிக்கும் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரை உதவும். வல்லாரை சூப்பரான கஞ்சி செய்து சாப்பிடலாம். அதனை எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை :
வல்லாரை கீரை - 1 கொத்து
புழுங்கல் அரிசி - 1/4 கப்
திணை அரிசி - 1/2 கப்
குதிரை வாலி - 1/2 கப்
சீரகம் - 1 tsp
மிளகு - 1/4 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் -2 tsp
பூண்டு - 2 பல்
செய்முறை :
மூன்று அரிசியையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து கொள்ளுங்கள். வெந்ததும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மீதமுள்ள சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை வதக்குங்கள். அதனுடன் வல்லாரை கீரையை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். நன்றாக வதக்கியதும் அதனை கஞ்சியுடன் சேர்த்து கிளறி பரிமாறலாம்.