வீழ்ச்சியில் சின்ன வெங்காயம் விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
small onion price decrease
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் ஒட்டன்சத்திரம் காய் கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கர்நாடகா மாநிலத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயமும் இங்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வருடம் கர்நாடகாவில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதனால் கடந்த ஒரு வாரமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது:- "வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்துள்ளது. திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் இருப்பினும், உள்ளூரிலும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எங்களிடம் மொத்தமாக வாங்கி, சில்லறை வியாபாரிகள் வெளி சந்தையில் 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
small onion price decrease