பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் விருதுகள் பெற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் 'கஸ்தூரி ரங்கன்' இயற்கை எய்தினார்...!
Former ISRO Chairman Kasturi Rangan passed away
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவரான 'கஸ்தூரி ரங்கன்' என்பவர் 84 வயதான முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.இவர் பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.மேலும், மறைந்த கஸ்தூரி ரங்கன் அவர்கள்,1994 முதல் 2003 வரை ISRO தலைவராக பணியாற்றினார்.
அதுமட்டுமின்றி, இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்.கடந்த 2003 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
அதன் பின்பு தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவரது திடீர் மறைவு சோகத்தை அளிப்பதாக பலர் கலங்குகின்றனர்.
English Summary
Former ISRO Chairman Kasturi Rangan passed away