குளிர்காலத்துக்கு இதமாக காய்கறி சூப் எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் மாலை நேரத்தில் சுவையான காய்கறி சூப் செய்து கொடுத்தால் குளிருக்கு இதமாக இருக்கும். அதனை எப்படி செய்யலாம் என தற்போது பார்போம்.

தேவையானவை:

வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்

பூண்டு - 1 டீஸ்பூன்
கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணை - 2 டீஸ்பூன்
வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்

ஒயிட் சாஸ் தயாரிக்க:
பால் - 1 கப்
மைதாமாவு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிறிய பிரஷர் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டுப் பொடியாக உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக அரிந்த மற்ற காய்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் சிறிது வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றிக் கறுப்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடிக் கொதிக்கவிட்டு 2 விசில் விட்டதும் அணைக்கவும்.

வெந்ததும் அதனை இறக்கி காய்கறிகள் வெந்த தண்ணீரை தனியாக வைத்து கொள்ளவும். பின்னர் காய்கறிகளை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.  ஒரு குக்கரில், குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு மைதாமாவு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

அதனுடன் சோளமாவை தண்ணீரில் கரைத்து மிதமான சூட்டில் பாலை ஊற்றி கிளறவும். ஓயிட் சாசில் காய்கறிகளை வேகவிட்டு வடிகட்டிய நீரைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சுவையான சூப் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veg Soup Recipe TAMIL


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->