90'ஸ் ஃபேவரிட்டான வேர்கடலை பர்ஃபி... அசத்தலான ரெஸிபி.!
90s favourite Peanut Burfi recipe
உடலுக்கு தேவையான சத்துக்களையும் ஆற்றலையும் தரக்கூடியதும் நாவிற்க்கு சுவையானதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வேர்க்கடலை பர்பி எப்படி செய்வது என்று பார்ப்போம்:
தேவையான பொருள்கள்:
தோல் நீக்கிய வருத்த வேர்க்கடலை - 1 கப்
பொடித்த வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வேர்க்கடலை பர்பி செய்வதற்கு முதலில் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் முடித்து வைத்த வெல்லத்தூளை போட்டு நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இதனுடன் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நல்ல பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்கி விடவும்.
ஒரு தட்டில் நன்றாக நெய் தடவி அதில் வறுத்த வேர்க்கடலையை போட்டு அதன் மீது பாகு ஊற்றி சமமாக பரப்பவும்.
சூடு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டினால் சுவையான வேர்க்கடலை பர்பி ரெடி.
English Summary
90s favourite Peanut Burfi recipe