கோடை வெயிலை சமாளிக்க ஹெல்தியான பைனாப்பிள் லெமன் ஜுஸ்! இதோ ரெஸிபி!
A nutritious juice recipe to beat the summer heat
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த வெப்ப காலத்தில் கோடையின் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு ஜூஸ் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் - 1/2
எலுமிச்சை சாறு - 1/4 கப்
தேன்/ சர்க்கரை - 2-3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை ;
அன்னாசி பழத்தின் தோல் நீக்கி அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சர் ஜாரில் போட்டு இவற்றுடன் 1/4 கப் எலுமிச்சை சாறு, 2 டேபிள்ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த பின் அதை வடிகட்டி கிளாசில் ஊற்றி குடிக்கலாம். இது சுவையாக இருப்பதோடு ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு ஜூஸ் ஆகும்.
English Summary
A nutritious juice recipe to beat the summer heat