உடல் பலத்தை அதிகரிக்கும்... சுவையான பாதாம் மசாலா பால் செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


உடல் பலத்தை அதிகரிக்கும் பாதாம் மசாலா பால்..!

பொதுவாகவே, சிறுபிள்ளைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படுகிறது. இதை போக்க சிறந்த வழி, சத்து மிகுந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்வது மட்டுமே.

இந்த சூழ்நிலையில், புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், ட்ரை புரூட் எனப்படும் உலர் பழங்கள், கொட்டை வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டால் நல்லது. ஆனால், நம்மில் பலருக்கும் அவற்றை நேரடியாக உண்ண நேரம் கிடைப்பதில்லை!

பலருக்கு சோம்பேறித்தனம் என்றே கூறலாம். அதில், பாதாம் போன்ற பருப்புகளை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. எனவே, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில், சுவையான பாதாம் மசாலா பால் செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 2 கப்

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

பட்டை, லவங்கம் - 1

மிளகு - 15

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

குங்குமப்பூ - கால் டீஸ்பூன்

பாதாம் - 25

முந்திரி - 15

செய்முறை :

முதலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தனி தனி கிண்ணத்தில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

பின் பாதாம் பருப்பின் தோலை நீக்கவும். பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி அதில் மிளகு, பட்டை, கிராம்பு, லவங்கம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பாலினுள் மசாலா பொருட்கள் அனைத்தும் நன்கு இரங்கும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பால் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்ச வேண்டும். பின் பாதாம் மற்றும் முந்திரியை நன்கு மென்மையாக அரைத்து பால் எடுக்க வேண்டும். பின் அதனுடன் மீதமுள்ள பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும்.

மசாலா பால் கொஞ்சம் வற்றியதும், கொதிக்கும் பாதாம் பாலுடன் வடிகட்டி சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

இப்போது சுவையான பாதாம் மசாலா பால் தயார்... சாப்பிடலாம் வாங்க.!

குறிப்பு :

இந்த பாதாம் மசாலா பால் காய்ச்ச கொஞ்சம் பொறுமை தேவை. 

பாதாம் பால் அதிக தீயில் வைத்தால் பொங்கி விடும். அடிக்கடி கிளறி விட வேண்டும்.

மசாலா சேர்த்து கொதிக்க வைக்கும்போது குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். அப்போதுதான் சாறு நல்லா இரங்கும். 

மிளகை ஒன்றிரண்டாக தட்டி போட்டால் இன்னும் எஃபக்டாக இருக்கும். தொண்டை கர கரப்பு மற்றும் புரையேறுதலுக்கு நல்லதாக இருக்கும். 

பலன்கள் : 

இருமல், சளி, தொண்டை வலி எல்லாம் வருமுன் காக்க ஒரு அருமையான பானம் இந்த பாதாம் மசாலா பால்.

அதாவது அடிக்கடி சளி பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறை இதை காய்ச்சி குடித்து வந்தால் ஓரளவுக்கு குணம் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

badham masala paal preparation in tmail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->