வெறும் சுடுதண்ணீல இவ்வளவு நல்லதா.?! இந்த ஒன்றை சேர்த்தால் இவ்வளவு பயன்களா.?!
Benefits of hot water
வெந்நீர் குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை விட, மீதமான சூட்டில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
வெந்நீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக ஆறியவுடன் குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் ஏற்படும்.
உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற வெந்நீர் உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இந்த வெண்ணீருடன் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி, உடல் மற்றும் இதயத்தை சுத்தம் செய்து தூய்மையாக வைக்கிறது.
இதனால் ரத்த ஓட்டம் சீர் செய்யப்படும். மேலும் உடலில் உள்ள சளி அகற்றப்படுவதுடன், சிறுநீரகத்தை சுத்தம் செய்கிறது. மேலும், நெஞ்செரிச்சல் மூக்கடைப்பு போன்றவற்றையும் இது சரி செய்கிறது.