மணமணக்கும் மண்பாண்டம் சமையல் - உடலுக்கு ஆரோக்கியமா? - Seithipunal
Seithipunal


கால மாற்றத்தினால் மண்பானையில் சமைக்கும் பழக்கத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இருப்பினும் கிராம பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மக்கள் மண்பானை வைத்து சமையல் செய்து வருகின்றனர். இப்படி மண்பானையில் சமைப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்த பதிவில் காண்போம். 

* மண்பானையில் நிறைய நுன்துளைகள் உள்ளது. இந்த நுன்துளைகள் மூலம் நீராவி உணவுக்குள் சீராக ஊடுருவிகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

* சிறிய நுன்துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாக வெளியேற்றப்படுவதால் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. 

* குளிர்சாதன பெட்டியில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல பானையில் இருக்கும் நீர் ஆகாது மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.

* மண்பாண்ட சமையல் அதிக எண்ணெயை ஏற்றுக் கொள்ளாது. இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் மண்பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. ஆகவே எந்த ரசாயன பொருட்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். இதனால், நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of sand pot food


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->