சமைக்காத உணவுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.? - Seithipunal
Seithipunal


பொதுவாக மனிதர்கள் அனைவரும் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் சமைப்பது மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது. இதனால் சிலர் உணவுகளை பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.

அதன்படி பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமில்லாமல் பால் சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகளையும் சிலர் அப்படியே சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு சமைக்காமல் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

பொதுவாக சமைத்த உணவுகளுடன், சமைக்காத உணவுகளை ஒப்பிடும்போது சமைக்காத உணவுகளில் அதிக அளவு நாசத்து நிறைந்துள்ளது. இந்த நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை நமது உடல் எடை குறைத்து நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த சமைக்காத உணவுகள் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் குளிர்பானம் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிக அளவில் உள்ளது. கலோரி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடுதல், நீரழிவு நோய், உயர் ரத்த கொழுப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

பணம் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தப்படாதவை என்பதால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும் நமது உடலில் உள்ள நுண் கிருமிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அதிலும் குறிப்பாக சமைக்கப்படாத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Vegetables and fruits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->