தினமும் ஒரு பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!
Benifits Of Green Apple
ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். சிவப்பு ஆப்பிளை போல பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று பார்போம்.
கண்களின் ஆரோக்கியம்:
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும்.
நீரிழிவு நோய்க்கு நல்லது :
பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு மேலும், நார்சத்துக்கள் போதுமான அளவு உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது :
பச்சை ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நமது நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
எலும்பு வலிமை :
பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்.
சரும ஆரோக்கியம்:
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.