தென் மாவட்ட ஸ்பெஷல்.. பிரியாணிக்கு சுவையான தால்ச்சா..! செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களில் முஸ்லிம்களின் வீட்டு திருமண வைபவத்தில் பிரியாணியுடன் நிச்சயமாக இடம் பெறும் இந்த தால்ச்சா என்று குழம்பு. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

ஆட்டு எழும்புடன் கறி = 100கிராம்
கடலை பருப்பு = 50 கிராம்
துவரம் பருப்பு = 100 கிராம்
பச்சை கத்திரிக்காய் + முருங்கை காய்/ சுரைக்காய்/ சௌசௌ இதில் ஓரு காய் = 200கிராம்
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - முக்கால் தேக்கரண்டி
(மல்லி) தனியா பொடி - ஒரு தேக்கரண்டி
புதினா & கொத்தமல்லி தழை = சிறிதளவு
இஞ்சி + பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா பொடியை - சிறிதளவு
புளி - சிறிதளவு (மாங்காய் போடுவதாக இருந்தால் புளியை குறைத்து விடலாம்)
தேங்காய் துருவியது - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - 1 குழிக்கரண்டி.

செய்முறை:

கொடுத்திருக்கும் பருப்புகளையும் எலும்பையும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக்
கொள்ளவும்.

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நீளவாக்கில் நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும், அதன்பிறகு வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், புதினா கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். மஞ்சள் + தனியா + மிளாய் பொடிகளை சேர்த்து வதக்கிவிட்டு வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து அதற்கு தேவையான உப்பு, இரண்டு பச்சை மிளகாய், (மாங்காய் துண்டுகளாக வேண்டுமானால் கடைசியாக சேர்க்கவும், வேண்டாம் எனில் காய்கறிகளோடு வேகவிடவும்) போட்டு நன்றாக பிரட்டி (எழும்பு வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதையும் சேர்க்கலாம்)சிறிது தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவைக்கவும்.

அவை வெந்ததும் வேகவைத்த எழும்பு, பருப்பு கலவையை சேர்த்து கலந்துவிட்டு, கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் இப்போது கெட்டியாக கரைத்து புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.

அதன் பிறகு உப்பு+ கரம்மசாலா + அரைத்த தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அனத்துவிடவும். பிரியாணி, புலாவ், சப்பாத்தி, இட்லி தோசை எல்லாவற்றுக்கும் சேர்த்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

briyani thalcha preparation in taml


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->