தேனில் ஊறவைத்த வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றங்கள்.! தெரிஞ்சிக்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


சின்ன வெங்காயம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நம் உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது. மேலும் நம் உடலுக்கு சிறந்த ஆன்டிபயாட்டிக்காகவும் செயல்படுகிறது. இந்த சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது நமது ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்கிறது. ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி இரத்தம் தூய்மையாக இருப்பதற்கு இது உதவுகிறது.

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடும் போது நம் உடலில் இருக்கின்ற நச்சுக்கள் நீங்குகின்றன. இதனால் உடல் சுத்தமாவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது. இதன் காரணமாக செரிமான மண்டலத்தின் செயல் திறன் அதிகரிக்கிறது.

சின்ன வெங்காயத்திலும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மூலக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. தேனிலும்  நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் சத்துக்கள் இருப்பதால்  தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது  நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கிறது.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன்  தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர இது நம் உறக்கத்தை தூண்டி நல்ல நிம்மதியான உறக்கம் பெற வழி செய்கிறது

உறைந்த நெஞ்சு சளி எப்போதும் எனும் நுரையீரலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர குறைந்த நெஞ்சு சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can we eat small onions soaked in honey and what are the benefits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->