கோடை வெயிலுக்கு இதம் தரும் பாரம்பரிய முறையில் கம்பங்கூழ் ரெசிபி இதோ! - Seithipunal
Seithipunal


சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உடலின் வெப்பத்தை தணிக்கும் கம்மங்கூழ் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

தேவையான பொருட்கள்:

கம்பு  - 1 கப்
தண்ணீர் - 6 கப்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கம்பை தூசு, குப்பையில்லாமல் சுத்தப்படுத்தி நன்றாக கழுவி 4 முதல் 5 மணி நேரம் வெயிலில் காயவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் நற நறவென  பொடித்தெடுத்துக் கொள்ளவும்.

மதிய நேரம் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி கொதித்ததும் பொடித்து வைத்த கம்பை சேர்த்து கைவிடாமல் மிதமான தீயில் அடுப்பை வைத்து மாவை 15 நிமிடங்கள் கிளறி விட்டு வேகவிடவும். வெந்தயம் பின் அதை அப்படியே மூடிவைத்து விடவும்.

இரவு நேரத்தில் வேகவைத்த கம்பில் ஒரு  கப் தண்ணீர் ஊற்றி வைத்து விடவும். அடுத்தநாள் காலை தேவைக்கு ஏற்ற கம்பை எடுத்து தயிர், தண்ணீர், உப்பு போட்டு கரைத்து மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், போன்றவற்றோடு கரைத்து கடித்தால் அடி தூள் ருசி தான்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Classic reciepe of pearl millet poridge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->