சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தயிரை எடுத்துக் கொள்ளலாமா?? - Seithipunal
Seithipunal


தயிர் நம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் போது நமக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை  வழங்குகிறது. இதில் இருக்கக்கூடிய புரோட்டின்  வைட்டமின்கள் மற்றும்  ரிப்போ பிளேவின் போன்றவை உடலுக்கு தேவையான சத்துக்களையும் ஆற்றலையும் கொடுக்கின்றன. மேலும் தயிரை தினமும் பயன்படுத்தி வர உடல் குளிர்ச்சி அடைவதோடு வயிற்றுப்புண்  போன்றவற்றிற்கும் சிறந்த அருமருந்தாக பயன்படுகிறது. இத்தகைய நன்மைகளை தரக்கூடிய தயிரை  சர்க்கரை நோயாளிகள்  தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? என பார்ப்போம்.

தயிரில் இருந்து பெறப்படக்கூடிய ப்ரோ பயோடிக் பாக்டீரியாக்கள்  சர்க்கரை நோய்க்கு எதிரான நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவை நம் உடலின் செரிமானத்தை சீராக்கி குளுக்கோஸ் மெட்டபாலிசம்  தாமதமாக நடைபெறும். இதன் காரணமாக  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் இவை கட்டுப்படுத்துகின்றன.

மேலும் தயிரில் இருக்கக்கூடிய வைட்டமின் கே புரோட்டின் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் இந்த  சத்துக்களை உடலானது  விரைவாக செரிமானம் கொள்ளச் செய்கிறது.  இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இவை டைப் 2  நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தயிரில் இருக்கக்கூடிய புரோட்டின்  பாலில் இருக்கக்கூடிய புரோட்டினை விட  விரைவாக உடலில் கரைந்து விடுகிறது. இதன் காரணமாக செரிமானத்திற்கு  அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. இதன் மூலம் உடலானது அதிகப்படியான சர்க்கரையை உற்பத்தி செய்வது  கட்டுப்படுத்தப்படுகிறது.

தயிரை எடுத்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு எதிராக நல்ல பலன்களைத் தரும் என்றாலும் அதிக சர்க்கரையுடன் கூடிய தைரியை எடுத்துக் கொள்வதை  தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறைவான சர்க்கரை உள்ள  மற்றும் குறைந்த  கொழுப்புச் சத்துக்களை உள்ளடக்கிய தயிரை  பயன்படுத்துவது  நல்ல பலன்களை கொடுக்கும்.

இது போன்ற சர்க்கரை நோயாளிகள்  கிரீக் தயிர் வகைகளை பயன்படுத்தலாம் . இந்த தயிர் வகைகள்  கொழுப்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அளவு கம்மியாகவும் அதிகமான அளவு புரோட்டின் சத்தினையும் கொண்டிருக்கும் .  இவை எளிதாக  செரிமானமாக கூடியதாகும். இதுபோன்ற தயிர் வகைகளை  நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம். எனினும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curd is good for diabetes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->