பகலில் தூங்குபவரா நீங்கள்.? இது உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


மதியம் உணவருந்தியப்பிறகு சின்னதா ஒரு தூக்கத்த போட்டா தான், எனக்கு அதுக்கப்புறம் உள்ள வேலையே ஓடும்" என்று சொல்லுபவரா நீங்கள்..! உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்.

பகல் பொழுதில் நம் பணிச்சுமைகளுக்கு இடையே சிறிது நேரம் உறங்கிக் கொள்வது  உடலுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகும். ஆனால் இந்த தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி குறைவான அளவில் பகல் பொழுதுகளில் தூங்குவதன் மூலம் நம்முடைய மனதும் உடலும் புத்துணர்வு பெறுவதோடு அமைதியாக இருக்கும்.

பகல் பொழுதில் சிறிது நேரம் தூங்குவதன் மூலம் உடல் சோர்வில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் 

இந்தப் பகல் பொழுது தூக்கமானது நம் உடலின் எச்சரிக்கை உணர்வை அதிகப்படுத்துகிறது.

பகல் பொழுது தூக்கமானது நமது மனநிலை சீராக இருப்பதற்கும் அமைதியாக இருப்பதற்கும் உதவுகிறது.

பகல் பொழுதில் பணிகளுக்கு இடையே சிறிது நேரம் உறங்கி எழுவதன் மூலம் நமது உழைப்பில் செயல் திறன் அதிகரிப்பதற்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் இது உதவுகிறது .

பகல் பொழுதில் அதிகமாக தூங்குவதன் மூலம் நமது இரவு உறக்கமானது பாதிக்கப்படும். இதுதான் பகல் பொழுதில் உறங்குவதன் மிகப்பெரிய தீமை ஆகும். 

நீண்ட நேரமாக பகலில் உறங்கிக் கொண்டிருந்தால் உடலுக்கு தேவையான சக்திகள் எதையும் நாம் புறச்சூழ்நிலைகளில் இருந்து பெற்றுக்கொள்ள இயலாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Day sleep Habit Benefit and Disadvantages


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->